21ஆவது திருத்தச் சட்டத்தின் கீழ் அரசியலமைப்பு பேரவைக்கு சிவில் சமூக உறுப்பினர்களுக்கான விண்ணப்பங்கள் கோரல் !

Loading… 21ஆவது திருத்தச் சட்டத்தின் கீழ் ஸ்தாபிக்கப்பட்ட அரசியலமைப்பு பேரவைக்கு சிவில் சமூக உறுப்பினர்களை நியமிக்க தகுதியான நபர்களுக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. எதிர்வரும் நவம்பர் மாதம் 28 ஆம் திகதிக்கு முன்னர் குறித்த விண்ணப்பங்களை நாடாளுமன்றத்திற்கு அனுப்பி வைக்குமாறு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார். Loading… அதன்படி, எந்தவொரு அரசியல் கட்சியிலும் உறுப்பினர்களாக இல்லாதவர்கள், பொது அல்லது தொழில் வாழ்க்கையில் சிறந்த ஆளுமை கொண்டவர்கள் இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்கலாம். Loading…